நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு... பொள்ளாச்சி ஜெயராமனால் மு.க.ஸ்டாலினுக்கு சிக்கல்..!

By vinoth kumarFirst Published Jul 21, 2020, 3:36 PM IST
Highlights

ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு தொலைக்காட்சியிலும்,  வார இதழ்களிலும் செய்தியாக வெளியானது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னைத் தொடர்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவலை ஸ்டாலின் பேசி வருவதால், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னைப் பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

click me!