கொரோனா காலத்தில் மோடி அரசின் சாதனைகள்.. பட்டியலிட்டு பாஜகவை பங்கம் செய்த ராகுல் காந்தி..!

By vinoth kumarFirst Published Jul 21, 2020, 2:58 PM IST
Highlights

கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

கடந்த சில நாள்களாகவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். சீனா மற்றும் எல்லை விவகாரம், பொருளாதாரம் கொரோனா தொற்று என பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.  இந்நிலையில், மத்திய அரசின் தற்சார்பு கொள்கை குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் ராகுல் காந்தி, இந்தியாவின் அடிப்படைத் தேவைகளை மத்திய அரசு மாற்றியமைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோவிட் காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: 

பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப்.
மார்ச்- மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது.
ஏப்ரல்- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்.
மே-அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம்.
ஜூன் - பீகார் மெய்நிகர் பேரணி.
ஜூலை- ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.

இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!