இந்தியாவை கொஞ்சம் கூட மதிக்காத ராஜபக்சே..!! விழுந்தடித்து, கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுக்கும் மோடி.

Published : Sep 30, 2020, 10:28 AM IST
இந்தியாவை கொஞ்சம் கூட மதிக்காத ராஜபக்சே..!! விழுந்தடித்து, கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுக்கும் மோடி.

சுருக்கம்

வங்கக் கடலிலும் இந்து மாக்கடலிலும் பெருகி வரும் சீன அபாயத்தைத் தடுப்பற்காகவே இந்த உதவி அளிக்கப்படுவதாக கூறியிருப்பது கேலிக் கூத்தாகும். 

தொடர்ந்து இலங்கை சீனாவுடன் நட்பு பாராட்டி வரும் நிலையில் இந்தியா இலங்கைக்கு  கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுப்பது எதற்காக, சீனாவுக்கு மிக நெருங்கிய நாடான இலங்கைக்கு ராணுவ உதவிகளை அளிப்பது எதற்காக? யாரை எதிர்க்க என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் மத்திய அரசை கண்டித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

 

இலங்கை இராணுவத்தை நவீன மயப்படுத்த 500 இலட்சம் டாலர் உதவியை இந்திய அரசு வழங்கும் என நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இலங்கை தலைமையமைச்சர் இராசபக்சேவுடன் நடத்தியப் பேச்சு வார்த்தையில் இது முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலிலும் இந்து மாக்கடலிலும் பெருகி வரும் சீன அபாயத்தைத் தடுப்பற்காகவே இந்த உதவி அளிக்கப்படுவதாக கூறியிருப்பது கேலிக் கூத்தாகும். இலங்கையில் அம்பன்தொட்டா துறைமுகம் கட்டுவதற்கும் கடற்படைத் தளம் அமைப்பதற்கும் சீனாவுக்கு இடம் கொடுத்ததின் மூலம் இந்தியாவுக்கு மிக அருகில் சீன அபாயத்தைக் கொண்டு வந்தவர் இராசபக்சே ஆவார். 

மேலும் இந்தியாவில் பயிற்சி பெறும் வெளிநாட்டு வீரர்களில் 50% இடங்கள் சிங்கள இராணுவ வீரர்களுக்கு அளிக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் கிடையாது. இந்தியா இலங்கையின் நட்பு நாடாக இருக்கும் போது யாருக்கு எதிராக இந்த இராணுவ உதவிகளை இந்தியா இலங்கைக்கு அளிக்கிறது? சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இலங்கை தொடர்ந்து நீடித்து வரும்போது இத்தகைய உதவிகளை இந்திய அரசு அளிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் கண்டித்துள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!