எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆருக்கு இணையானவரா.? தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி.? - ராஜன் செல்லப்பா அதிரடி

By Ajmal Khan  |  First Published Apr 26, 2023, 8:28 AM IST

தமிழகத்தில் அதிமுக- திமுக கட்டமைப்புடன் உள்ளது, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்  கட்டமைப்பு இல்லாததால் திராவிட கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை என  வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 


விரக்தியில் ஓபிஎஸ்

அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை காதக் கிண்ற்றில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,  திருச்சி முப்பெரும் விழாமாநாட்டில் ஒ.பன்னீர் செல்வத்தின் பேச்சு அவர் விரக்தியின் உச்சத்தில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்தார். இந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரை விமர்சித்த ஓபிஎஸ்,  திமுகவை ஒரு வரி கூட விமர்சிக்கவில்லையென கூறினார், ஒ.பி.எஸ் மாநாட்டின் மூலம் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

எம்ஜிஆருக்கு இணையானவரா இபிஎஸ்.?

எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆருடன் ஒப்பிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆருக்கு இணையானவர் என சொல்லவில்லை, எம்.ஜி.ஆரை போல செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என கேள்விக்கு பதில் அளித்த அவர், கூட்டணி கொள்கைக்காக அமைப்பது இல்லை, தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது, பாஜகவுடன் அதிமுக வைத்து உள்ள கூட்டணியை அதிமுக தொண்டர்கள் யாரும் எதிர்க்கவில்லையென தெரிவித்தார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் கட்டமைப்புடன் உள்ளது, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ் கட்டமைப்பு இல்லாததால் திராவிட கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை, தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் மட்டுமே கூட்டணி, இதை நாங்கள் மறுக்கவோ, மறைக்கவோ இல்லையென தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலைக்கு தடை விதியுங்கள்..! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்த காங்கிரஸ்

click me!