அண்ணாமலைக்கு தடை விதியுங்கள்..! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்த காங்கிரஸ்

By Ajmal Khan  |  First Published Apr 26, 2023, 7:26 AM IST

கர்நாடகவில் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்த போது தனக்கு கீழ் பணியாற்றியவர்களை தற்போது பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. 
 


கர்நாடக சட்டமன்ற தேர்தல்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடித்தால் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடலாம் என  இரு தரப்பும் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடக மட்டுமே, இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இருந்த போதும் பாஜக ஆட்சி மீதான மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியே கர்நாடாகவில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு கூறுகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கர்நாடக மாநிலம் முழுவதும் அண்ணாமலை தீவிரமாக பிரச்சாம் மேற்கொண்டு வருகிறார். 

Tap to resize

Latest Videos

அண்ணாமலைக்கு தடை விதியுங்கள்

ஏற்கனவே உடுப்பிக்கு பகுதிக்கு அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்ததாகவும் அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் அடங்கிய பேக் இருந்ததாக காங்கிரஸ் புகார் கூறியிருந்தது. இந்தநிலையில் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் அண்ணாமலை மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. அதில், கார்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளாராக இருக்கும் அண்ணாமலை,  கர்நாடகாவில் காவல்துறையில் இருந்தபோது சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியதாகவும் எனவே தேர்தல் பணியில் உள்ள காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தனக்கு கீழ் பணியாற்றிய  போலீசாரை அண்ணாமலை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

கர்நாடக தேர்தலுக்காக கட்டுக்கட்டாக பணத்தோடு ஹெலிகாப்டரில் வந்தேனா.? புகாருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை
 

click me!