புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராணயன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது.

புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சமபலத்தில் உள்ளனர். ஆளுங்கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்களும், எதிர்கட்சிகளுக்கு நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்பட 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனால் புதுச்சேரி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும், சட்டப்பேரவையில் உடனே கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மன அளித்திருந்தனர்.
இந்நிலையில், புதிய ஆளுநர் பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் நாளை சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். அதன்படி நாளை சட்டப்பேரவை கூடுகிறது. இந்நிலையில், புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராணயன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார். அதில், கட்சியில் உரிய மரியாதை இல்லாததால் ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால், முதல்வர் நாராயணசாமி அரசுக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு 13ஆக குறைந்ததால் பெருபான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே நாராணயசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.