முதல்வரை ‘ஆஹா...ஓஹோ...’ என புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்... மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய எடப்பாடி பழனிசாமி..!

Published : Feb 21, 2021, 01:28 PM IST
முதல்வரை ‘ஆஹா...ஓஹோ...’ என புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்... மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய எடப்பாடி பழனிசாமி..!

சுருக்கம்

முதல்வர் பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். 

முதல்வர் பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். 

புதுக்கோட்டை விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். 

பின்னர், விழா  மேடையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்;- முதல்வர் பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வராக இந்த ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நதிகளை இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். எந்தவித குறையும் சொல்லமுடியாத ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 

எங்களிடம் இருந்து யாரும் வெற்றியை தட்டிப்பறிக்க முடியாது, 3வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார். திமுக சாதனையை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் இந்த ஆட்சி மீது ஸ்டாலின் பழி சுமத்துகிறார் என விமர்சனம் செய்துள்ளார். கடந்த வாரம் கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்ட விழாவிலும் ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறாமல் அப்படியே நடைமுறைபடுத்தும் முதல்வராக எடப்பாடி இருக்கிறார் என துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!