டிச.14 அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை!!

By Narendran SFirst Published Dec 12, 2022, 9:21 PM IST
Highlights

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொது குழு தொடர்பான வழக்கு... விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்!!

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 14 ஆம் தேதி அமைச்சராக உள்ளதாகவும் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

இதையும் படிங்க: 2024 தேர்தலில் ரஜினிகாந்த்.. மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவு.. கொளுத்தி போட்ட அர்ஜுன் சம்பத் !

பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி விளையாட்டுத்துறை பொறுப்பும் கூடுதலாக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!