மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, புதுச்சேரி மக்கள் மட்டுமில்லாது, பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் அன்பை பெற்றது என்று கூறியுள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29-ந் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே நடைப்பயற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர்.
கடந்த 2 ஆம் தேதி அங்கு 2 அடி உயரத்தில் யானையின் கற்சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி வந்தனர். அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி இங்கு சிலை வைக்கக்கூடாது. அதனை அகற்றுமாறும் உத்தரவிட்டனர். பிறகு போலீசார் லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர்.
இதையும் படிங்க.. 2023ல் பெரும் போர் மட்டுமா! இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !! நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று புதுச்சேரிக்கு வந்தார். பின்னர் யானை லட்சுமி உயிரிழந்த இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, புதுச்சேரி மக்கள் மட்டுமில்லாது, பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் அன்பை பெற்றது. யானை மறைந்தபோது நடந்த ஊர்வலமே இதற்கு சாட்சி. யானையை கோயிலில் இருந்து அகற்றவேண்டுமென்று பலர் முயற்சி செய்தனர்.
கோயில் என்றால் யானை இருக்க வேண்டும். மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிதாக யானையை அரசு வழங்க வேண்டும். யானை லட்சுமி நினைவாக நினைவகம் அமைக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தவர் ஆவார். அக்கருத்துகள் மேன்மை பெற பாஜக வலிமை பெற வேண்டும்.
இதையும் படிங்க.. பெரிய தூண்டில் போட்ட ஓபிஎஸ்.. குஜராத் டூர் சக்சஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ‘அந்த’ போட்டோ !
நேரடி அரசியலில் அவர் ஈடுபடாவிட்டாலும், திராவிட மாயையை அகற்றவும், மோடிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும். புதுச்சேரி மக்கள் தேசியத்தின் பக்கமுள்ளவர்கள். அதனால் திராவிட அரசியலை ஏற்க மாட்டார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் விருப்பமான புதுச்சேரியில் திமுக ஆட்சி என்ற ஆசை நிறைவேறாது என்று காட்டமாக பேசினார் அர்ஜுன் சம்பத்.
இதையும் படிங்க.. 3 வருடங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண்.. வேதனையில் கலெக்டருக்கு மனு !