இந்த 7 மாவட்டங்களில் இடி- மின்னலுடன் மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2021, 4:38 PM IST
Highlights

டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யும். 
 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 
இதுதொடர்பான அறிவிப்பில், ’’நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யும்.

 

பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்’’எனத் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வரும் 6ம் தேதி வடக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 6,7 தேதிகளில் தெற்கு தீபகற்ப இந்தியாவின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை இருக்கும். வரும் 7ஆம் தேதி கேரளா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் உள்ள தெற்கு உள் கர்நாடகாவில் கனமழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

click me!