கொரோனா அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள்... மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2021, 3:49 PM IST
Highlights

டாஸ்மாக் மதுக்கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கக்கூடாது என மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கொரோனா அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
அந்த கட்டுப்பாடுகளின்படி, கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, அவினாசி சாலையில் ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள் , காளப்பட்டி சாலை, டி.பி.சாலை, காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான தெருக்கள், சலீவன் வீதி ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களும் மூடப்பட்டுள்ளன.

முன்பு காலை 8 மணி முதல் செயல்பட்டு வந்த ஓட்டல்கள், தேநீர்க்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க கூடுதல் நேரம் அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தப்பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மதுக்கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கக்கூடாது என மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

click me!