
ஜெயா டி.வி.யை கைப்பற்றவேண்டும் என்பதே ரெய்டுக்கு காரணம்.. இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாயும் நாஞ்சில் சம்பத் !!!
வருமான வரித்துறை சோதனையில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றும் . ஜெயா டி.வி.யை கைப்பற்ற முதலரமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கொடூர வேலைதான் இது என நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 6 மணியளவில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் , திவாகரன் இல்லம், கோடநாடு எஸ்டேட், மறைந்த மகாதேவன் இல்லம, தஞ்சை டாக்டர் வெங்கடேஷ் இல்லம் என 160 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..
பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலா ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், வருமான வரித்துறை சோதனையில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றும் ஜெயா டி.வி.யை கைப்பற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் நடத்தும் வேலைதான் என குற்றம் சாட்டியுள்ளார்.