இரட்டை இலையை வேணும்னே இழுப்பது... சசியுடன் சிறை ஆலோசனை... ரெய்டுக்கு காரணம் இதானா?

 
Published : Nov 09, 2017, 08:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
இரட்டை இலையை வேணும்னே இழுப்பது... சசியுடன் சிறை ஆலோசனை... ரெய்டுக்கு காரணம் இதானா?

சுருக்கம்

what is the reason behind today it raid on jaya tv ttv dinakaran supporters

இன்றைய காலை நேரப் பொழுது, பலருக்கும் அதிர வைக்கும் ஆச்சரியப் பொழுதாகவே விடிந்திருக்கிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்ற செய்தி தான் அது. தொடர்ந்து, சென்னையில் மேலும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

வருமானம் குறித்து முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால், அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்டமாகக் கூறப்பட்டது. ஜெயா டிவி., மட்டுமல்லாமல், தினகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டி.வி. பழைய அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் , வேளச்சேரி பீனிஸ்க் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, மன்னார்குடி திவாகரன் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழத் திருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு உள்ளிட்ட 160 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. 

இந்த சோதனைகளுக்கு, தற்போதைய அரசியல் சூழல் தான் காரணம் என்று பேசப்படுகிறது. டிடிவி தினகரன் தரப்பு, தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைச் சின்னத்துக்காக வேண்டுமென்றே இழுத்துக் கொண்டு செல்வதும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான எதிர்க்கட்சி அரசியலை விட தீவிர வேகத்தில் பேசுவதும், அடுத்த கட்ட அரசியல் நிலவரம் குறித்து பெங்களூரு சிறையில் சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்துப் பேசியதும் காரணம் என்றெல்லாம் கிசுகிசுக்கப் பட்டாலும், உண்மைக் காரணம் இவைதானா என்ற கேள்வி எழுகிறது. 

இன்று நடைபெறும் ஜெயா டிவி., தினகரன், குடும்பம் சார்ந்த நிறுவனங்கள், இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெறுவதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டாக வேண்டும். எடுத்த வுடனே திடீரென்று எல்லாம் சோதனைக்கு அனுப்பி விட இயலாது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு திட்டமிடல் சென்ற மாதமே நடந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய அரசியல் சூழலுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.  காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை என்று சொல்வது போல், இது அமைந்து விட்டது... என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!