
சுக்ர திசை! என்பார்களே அது சுழன்று சுழன்று அடிக்கிறது தினகரன் ஜாதகத்தில். மனிதர் எங்கே கை வைத்தாலும் ராங்கா போகாமல் மாஸ் சாங்காக மாறிக் கொண்டிருக்கிறது.
அம்மாம் பெரிய ஆளுங்கட்சி, இம்மாம் பெரிய எதிர்கட்சி என இரண்டு பேரையும் தூக்கி விழுங்கிவிட்டு ஆர்.கே.நகரில் அசத்தலாக ஜெயித்தார் தினகரன். இப்போது சட்டமன்றத்தில் ‘தனி ஒருவன்’ ஆக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவரது பண்ணை வீட்டில் நடந்த ரெண்டாம் கட்ட ரெய்டின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் ‘கை நனைத்தார்கள்’ என்று எழுந்திருக்கும் தகவல் அல்லு தெறிக்க வைத்திருக்கிறது.
அதாவது “கடந்த நவம்பரில் சசி மற்றும் தினகரன் வகையறாக்களின் சொத்துக்கள் முழுக்க வருமான வரித்துறை ரெய்டு செய்தது. அப்போது புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் உள்ள பண்ணை வீட்டையும் சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.
ஆனால் அப்போது அங்கே வேலையாட்கள் மட்டுமே இருந்ததால் சில அறைகளுக்கு சீல் வைத்துவிட்டு கிளம்பினார்கள். இந்த அறைகளில் கடந்த 7ம் தேதியன்று மறுபடியும் சோதனை நடத்தியிருக்கிறார்கள். பின் நடந்ததாக சொல்லப்படும் விஷயம்தான் ஹாட் ஹைலைட்.
அதாவது ரெய்டுக்கு வந்திருந்த அதிகாரிகளுக்கு பாண்டிச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டலில் இருந்து மட்டன் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் வாங்கி பரிமாறப்பட்டதாம். அதேபோல் இரவில் முட்டை தோசை, சிக்கன் ஃபிரை! என்றும் அமர்க்களமாக விருந்தளிக்கப்பட்டதாம்.
அப்படின்னா, தினகரனோட பண்ணை வீட்டுல கை நனைச்சுதா வருமான வரித்துறை? என்பதுதான் தெறிக்கும் கேள்வியே.