‘சிங்கிள் பிராண்ட்’ சில்லரை வர்த்தகத்தில் 100 % அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

 
Published : Jan 10, 2018, 10:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
‘சிங்கிள் பிராண்ட்’ சில்லரை வர்த்தகத்தில் 100 % அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

சுருக்கம்

central Ministry Allow 100 percentage FDI in retail in single brand

 ‘சிங்கிள் பிராண்ட்’ சில்லரை வர்த்தகத்திலும், கட்டுமானத் துறையிலும் அரசின் ஒப்புதல் இன்றி, 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மேலும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் அன்னிய விமான நிறுவனங்கள் 49 சதவீதம் முதலீடு செய்யலாம் எனவும் அனுமதி அளித்தது.

உலகப் பொருளாதார மாநாடு

இந்த மாதம் இறுதியில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், மத்திய அரசு திடீரென இந்த முடிவுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சரவை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புது டெல்லியில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு-

100 சதவீதம் அனுமதி

நாட்டில் வர்த்தகம் செய்வதையும், தொழில் செய்வதையும் எளிமைப்படுத்தவும், வேலைவாய்ப்பை பெருக்கவும், நாட்டுக்குள் அன்னிய செலாவணி முதலீட்டை அதிகப்படுத்தவும் பல்வேறு முடிவுகளை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

இதற்கு முன் ‘சிங்கிள் பிராண்ட்’ சில்லரை வர்த்தகத்தில் அரசின் ஒப்புதல் இன்றி அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. அதை மாற்றி இனி கட்டுமானத்துறையிலும், சிங்கிள் பிராண்ட் சில்லரை வர்த்தகத்திலும் 100 சதவீதம் அரசின் ஒப்புதல் இன்றி அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். 

ரியல் எஸ்டேட் துறை

ரியல்எஸ்டேட் துறையில் இடைத்தரகு சேவையில்(புரோகேஜிங்) ஈடுபடும் நிறுவனங்களைரியல் எஸ்டேட் நிறுவனங்களாகக் கருத முடியாது. ஆதலால், அந்த துறையிலும் 100 சதவீதம் அரசின் ஒப்புதல் இன்றி அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஏர் இந்தியாவில் முதலீடு

அதேபோல, ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் வரை அரசின் ஒப்புதலுடன் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இப்போதுள்ள விதிமுறையின்படி, இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீதம் அளவுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால், இது ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

 ஆனால், இப்போது வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் வரை அரசின் ஒப்புதலுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சிங்கிள் பிராண்ட் என்றால் என்ன?

சிங்கிள் பிராண்ட் என்பது, ஒரு நிறுவனம் தான் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அளிக்கும் சேவை மட்டும் குறிப்பிடுவதாகும். மற்ற நிறுவனங்கள், சேவைகள் இதன் கீழ் கொண்டுவரப்படாது. உதாரணமாக, குவாலியர் மில்ஸ் நிறுவனத்தின் துணிக்கடை என்பதால், அந்த நிறுவனத்தின் துணிகள், ஆடைகள், உள்ளிட்ட அத்தனை தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படும். ஆனால், மற்ற நிறுவனங்கள், மில்களின் துணிகள் ஆடைகள் விற்பனை செய்யப்படாது. இதற்கு பெயர்தான் சிங்கிள் பிராண்ட் ஆகும். 

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு...
சிங்கிள் பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கு இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “பாரதிய ஜனதா கட்சி தேர்தலின் போது, சிங்கள் பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீதம் அரசின் ஒப்புதலின்றி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வர மாட்டோம் என உறுதியளித்து விட்டு இப்போது மீறிவிட்டது. இந்த உத்தரவு மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் எளிதாக நுழைந்துவிடும்’’ என கவலை தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!