மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினருக்கு அடிக்கிது ‘ஜாக்பாக்ட்’

First Published Jan 10, 2018, 9:59 PM IST
Highlights
central budget will be a jackpot for middle class people

மத்திய அரசு பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினரையும், மாத ஊதியம் பெறும் பிரிவினரையும் உற்சாகப்படுத்தும் வகையில் வருமான வரி விலக்கை உயர்த்தி அறிவிப்பு வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு பட்ஜெட்

மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு  கடைசி முழு பட்ஜெட்டை(2018-19) வரும் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்கிறது.

சலுகைகள்

2019ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்துவிடும் என்பதால், அப்போது இடைக்கால பட்ஜெட், செலவினத்துக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஆதலால், இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களையும், வரிச்சலுகைகளையும் அறிவித்து அடுத்த ஆண்டு தேர்தலுக்கு அச்சாரமாக இதை பயன்படுத்திக் கொள்ளும்.

வருமானவரி விலக்கு

அந்த வகையில், 2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரும் பிப்ரவரி1-ந் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தற்போது, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் ஊதியம் பெறுபவர்கள் வரை வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பாதிப்பு

இது தவிர, வருமான வரி செலுத்துபவர்கள் படிநிலையில் (சிலாப்) மாற்றம் செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கும்,   மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதாக அமையும்.

கடந்த ஆண்டு
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரம், ரூ.2½ முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள், சிறு அளவில் நிவாரணம் பெறும் விதமாக 10 சதவீத வருமான வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

புதிய சலுகைகள்

அதேசமயம், வரும் பிப்ரவரி 1-ந்தேதி  தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம். தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அடுக்கு இல்லை. 10 லட்சத்துக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டினாலே அவர்கள் 30 சதவீத வரி செலுத்தும் நிலை இருக்கிறது. இந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

படிநிலைகள்

அதாவது, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு தற்போது 20சதவீதம் வருமானவரி விதிக்கப்பட்டு வருகிறது, இது   10 சதவீதமாக குறைக்கப்படலாம். இதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பெரும் பயன் அடைவார்கள்.

இதேபோல் 30 சதவீதம் வரி செலுத்தும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ஈட்டுபவர்களுக்கு வரி 20 சதவீதவீதமாக குறைக்கப்படலாம். ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு எந்த விதமான சலுகையும் அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு 30 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கோரிக்கை

இது குறித்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பு பட்ஜெட் குறித்து அரசுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது-

பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வருமானவரி செலுத்தாதவர்களின் வருமான அளவை அதிகரித்து, வருமான பிரிவுகளை அதிகரித்து   மாதச்சம்பளம் பெறுவோரின்  வரிச்சுமையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் ெதரிவித்துள்ளனர்.

click me!