அரசு முத்திரையோடு திருமண அழைப்பிதழ் ...பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் திடீர் சர்ச்சை

 
Published : Jan 10, 2018, 08:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
அரசு முத்திரையோடு திருமண அழைப்பிதழ் ...பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் திடீர் சர்ச்சை

சுருக்கம்

BJP MLA print wedding invitation with govt seal.

அரசு முத்திரையோடு திருமண அழைப்பிதழ் அச்சடித்த உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் திடீர் சர்ச்சை உருவாகியுள்ளது. இது குற்றமாகாது என்று அவர் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குஹரித்வார் மாவட்டம், ஜவல்பூர் தொகுதியில், எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுரேஷ் ரத்தோர். இவர் தனது மகள் திருமண அழைப்பிதழில் அரசின் லட்சிணையோடு சேர்த்து அச்சடித்துள்ளார்.

சரேஷ் ரத்தோர் தனது மகளின் திருமணத்துக்காக அச்சடித்துள்ள அழைப்பிதழின் இடது மேல் புறத்தில் உத்தரகாண்ட் மாநில அரசின் லட்சிணையை அச்சிட்டுள்ளார்.

அரசு முத்திரைகள், லட்சினையை தனியார் நிகழ்ச்சிகள், விருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தக்கூடாது என்று விதிமுறை இருக்கும் நிலையில் எம்.எல்.ஏ. ஒருவர் இவ்வாறு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எம்.எல்.ஏ. சுரேஷ் ரத்தோரிடம் நிருபர்கள் நேற்று ேகள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், “ நான் ஏழை பெண்ணை எனது சொந்த மகள் போல் கருதி திருமணம் செய்து வைக்கிறேன். அதை ஏன் மக்கள் பார்க்க மறுக்கிறார்கள்?. நான் அரசில் ஒரு பகுதியாக இருக்கிறேன், அங்கமாக இருக்கிறேன். அதலால் திருமண அழைப்பிதழில் அரசு சின்னத்தை,லட்சிணையை பயன்படுத்த உரிமை உண்டு. இது மிகப்பெரிய குற்றம் அல்ல. இதுபோல் ஏராளமானோர்  செய்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!