விளைவுகள் மிக மோசமாக இருக்கும்...!! மெத்தனம் வேண்டாம் என மோடியை எச்சரித்த ராகுல்காந்தி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2020, 4:28 PM IST
Highlights

சீனாவில் வைரஸ் பரவல் வேகமாக குறைந்துவருகிறது . ஆனால்  ஈரான் ,  இத்தாலி ,  ஆகிய நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது .  இந்த வைரசை கட்டுபடுத்த  மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன .

வைரஸ் நம் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்  மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக  இருந்துவரும் கொரோனா நாட்டின் பொருளாதாரத்தையும் விட்டுவைக்காது என அவர் எச்சரித்துள்ளார் .  எனவே இந்திய அரசு இதை முக்கிய பிரச்சனையாக கருதி இதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது . சீனாவில் மட்டும் 3,113 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது .

  

சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம்  பேருக்கு இந்த வைரஸ்  தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது .  இதுவரையில் இந்தியாவில் 75 பேர் வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதற்கு தீர்வு காணவில்லை.

எனில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்   கொரோனா  வைரஸ் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசு உறங்கிக் கொண்டிருக்கிறதா என அவர் தெரிவித்துள்ளார் அதே நேரத்தில் மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் . 

சீனாவில் வைரஸ் பரவல் வேகமாக குறைந்துவருகிறது . ஆனால்  ஈரான் ,  இத்தாலி ,  ஆகிய நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது .  இந்த வைரசை கட்டுபடுத்த  மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்துள்ளன .  டெல்லி கேரளா கர்நாடகா மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .  வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாகத்தான் இந்தியாவிற்கு கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது .  இந்நிலையில்  துறை முகங்கள்விமான நிலையங்கள் போன்ற இடங்களில்  தவிர மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டாலும் ,  பொதுமக்கள் நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவும்,  கண்காணிக்கவும் பல்வேறு இடையூறுகள் காணப்படுகிறது என ராகுல் கவலை தெரிவித்துள்ளார்.

 

click me!