பெரும்பான்மையான இந்துக்கள் ஒன்றுபட்டால் என்ன ஆகும் தெரியுமா.? முஸ்லிம்களுக்கு எதிராக கொந்தளித்த புதிய தமிழகம்

By vinoth kumarFirst Published Mar 13, 2020, 3:42 PM IST
Highlights

இப்போது உங்களை பார்த்து கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. உங்களைப் பார்த்து சந்தேகப்பட வேண்டியது இருக்கிறது. பெருபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் ஒற்றுமை இல்லாத காரணமா? அல்லது  இந்த சட்டத்தை குறித்து நூங்கள் பயப்பட வேண்டிய பார்வை இப்போது எல்லோரும் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சட்டத்தில் உங்களுக்கு என்ன பாதிப்பு வரும் போகிறது என்பது குறித்து உங்களிடம் பலமுறை கேட்டாச்சு. அப்போ நீங்கள் குற்றவாளியாக இருப்பீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் ஒற்றுமையாக இல்லை என்றும் அவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா என்று புதிய தமிழகம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

குடியரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். ஆனால், இந்த சட்டம் எந்த ஒரு இஸ்லாமியரையும் பாதிக்காது. ஆகையால், குடியரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் பேசிய தூத்துக்குடியை சேர்ந்த பே.கிருபைராஜ் பேசுகையில்;- தான் ஒரு கிருஸ்துவன். ஆனாலும் தான் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினார். இஸ்லாமிய சகோதரர்களே உங்களுக்கு என்ன இப்போ வந்துருச்சு. இந்த சட்டத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா அல்லது படிக்கவில்லையா. இத்தனை பேரு சொல்றாங்க, இவ்வளவு பெருந்திரளான மக்கள் சொல்கிறார்கள் மற்றும் தலைவர்கள் சொல்கிறார்கள் சட்டத் திருத்தத்தின் மசோதா கையில் இருக்கிறது. அந்த மசோதாவை அனைவரும் படித்து பார்த்து இருக்கிறீர்கள். மீண்டும் ஏன் உங்களுக்கு இந்த பிரச்சனை. 

இப்போது உங்களை பார்த்து கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. உங்களைப் பார்த்து சந்தேகப்பட வேண்டியது இருக்கிறது. பெருபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் ஒற்றுமை இல்லாத காரணமா? அல்லது  இந்த சட்டத்தை குறித்து நூங்கள் பயப்பட வேண்டிய பார்வை இப்போது எல்லோரும் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சட்டத்தில் உங்களுக்கு என்ன பாதிப்பு வரும் போகிறது என்பது குறித்து உங்களிடம் பலமுறை கேட்டாச்சு. அப்போ நீங்கள் குற்றவாளியாக இருப்பீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த சட்டத்தை பார்த்து உங்களுக்கு பயம் வர வேண்டும். அப்பா பேரு எனக்கு தெரியும், அம்மா பேரும் எனக்கு தெரியும், தாத்தா பேரும் தெரியும், பிறந்த தேதியும், பிறந்த ஊரும் தெரியும் இதெல்லாம் தெரியாதவர்களா நீங்கள். இங்க எதுக்கு வந்து குடியிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் பயப்படுபவர்கள் தான் அதற்கும் பயப்பட வேண்டும். என்.ஆர்.சி. மற்றும் என்.ஆர்.யில் இந்த கேள்விகள் தான் கேட்கப்படபோகிறது. உங்கள் ஜமாத்தில் மட்டும் அதன் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பங்கள் அவர்கள் நடத்தும் தொழில்கள் பற்றிய கணக்கு உள்ளதே ஏன் நம் நாட்டிற்கு அதுபோன்ற ஒரு கணக்கு தேவையில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் . மேலும் யார் வேண்டுமானாலும் வந்து செல்ல இது ஒன்றும் சத்திரம் அல்ல என்றும் கூறினார்.

click me!