ராகுல் காந்தி வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வயநாடு செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி" என்று பேசினார். 10,000 ஜாமீன் பத்திரத்தை செலுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து எம்.பி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார்.
எம்.பியாக இருப்பதால், அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அதிர்ச்சியான அறிவிப்பு வெளியானது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
undefined
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டப்படி, எந்த உயர் நீதிமன்றமும் தண்டனையை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது தண்டனையின் அளவைக் குறைக்காவிட்டாலோ, ராகுல் காந்தி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
நான்கு ஆண்டுகளாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தி வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வயநாடு செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், "ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் அவரது தொகுதி வயநாடு தான். தொகுதி மக்கள் மீது ராகுல் காந்தி அளப்பரிய அன்பு வைத்துள்ளார்.
வருகிற 11 ஆம் தேதி வயநாடு தொகுதி மக்களை சந்திக்க வருகிறார் ராகுல் காந்தி. அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சி சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், வயநாட்டில் வாழும் மக்களுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை வீடு, வீடாக வினியோகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா