தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உதயமாகிறது? சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 1, 2023, 1:16 PM IST
Highlights

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கும்பகோணம், ஆரணி, கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாகப் பிரிக்கும் கோரிக்கை தொடர்பாக நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;- புலி வாலை பிடித்த போட்டோவை பார்த்து அசந்து போனேன்..! சட்டப்பேரவையில் செல்லூர் ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசு

முன்னதாக கேள்வி நேரத்தின் போது ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். அதேபோல், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசு கொறடா கோவி செழியனும், ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையும் படிங்க;- சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் தான்.. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? தமிழக பாஜக கேள்வி

இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்;- தமிழ்நாடு முழுவதும் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனையில் உள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

click me!