ஜன்னல் ஏறி குதித்து தப்பிய ராகுல் காந்தி!!! எங்கு? ஏன் தெரியுமா?

First Published Aug 9, 2018, 11:06 AM IST
Highlights

கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் சிக்கி ராஜாஜி ஹாலின் முதல் தளத்தின் ஜன்னலில் ஏறி, அதன் அருகேயுள்ள சுவரில் கால் வைத்து,கீழே குதித்து தப்பினார்.
 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் சிக்கியதால், ராஜாஜி ஹாலின் முதல் தளத்தின் ஜன்னலில் ஏறி, அதன் அருகேயுள்ள சுவரில் கால் வைத்து,கீழே குதித்து தப்பினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை , ராஜாஜி ஹாலில், பொது மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. காடில சரியாக 5 மணிக்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த் கூட்ட நெரிசலில் சிக்கி தத்தளித்தார். கடைசி வரை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திண்டாடிப் போன ரஜினி அங்கிருந்து திரும்பிவிட்டார்.

இதை உணர்ந்துதானோ என்னவோ நேற்று  காலை 7 மணிக்கெல்லாம் ராஜாஜி ஹாலுக்கு வந்து ரஜினி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுவிட்டார். கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆனால் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் வரை, போலீசாரின் பாதுகாப்பு பிரச்னை இல்லாமல்இருந்தது. பொது மக்களும் அமைதியாக அஞ்சலி செலுத்திசென்றனர்.

பிரதமர் மோடி சென்ற பின், போலீசாரின் பாதுகாப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரு பக்கமும், பொதுமக்களையும், தொண்டர்களையும் உள்ளே அனுமதித்தனர்.இரண்டு வழியாக, தொண்டர்கள் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த நேரத்தில்தான்  காங்கிரஸ் தலைவர் ராகுல், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.அவருடன் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி., விஸ்வநாதன், ஆகியோர், ராகுலை வெளியே அழைத்து செல்ல அரணாக செயல்பட்டனர்.

ஆனால், கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலை  பாதுகாப்பு அதிகாரிகளால், சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து சமயோசிதமாக செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ராஜாஜி ஹாலின் முதல் தளத்தல் உள்ள 'ஜன்னல் வழியாக, ராகுலை குதிக்க வைத்து, அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து முதல் தளத்தின் ஜன்னல் அருகே பெயிண்ட்  அடிக்க பயன்படுத்திய, பெரிய டப்பாக்களை அடுக்கி, அதன் மேல், ராகுல் ஏறினார், பின், ஜன்னல் அருகில் உள்ள சுவரில் கால் வைத்து, கீழே குதித்தார். பின்னர் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்ட்டிருந்த காலில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

click me!