மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

First Published Aug 9, 2018, 9:00 AM IST
Highlights

திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார். 

இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி அவர்களை பெங்களூரில் கைது செய்யள்ளனர். 

தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியதற்காக நிகழும் அடக்குமுறையாகவே இந்த கைதினை பார்க்கவேண்டியுள்ளது. மெரினா புரட்சியை தொடர்ந்து, திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று இந்த கைது நடந்துள்ளது. 

click me!