கீழே விழுந்த ஃபோட்டோகிராபரை கை தூக்கிவிட்ட ராகுல்… வைரலாகும் வீடியோ !!

Published : Jan 27, 2019, 09:31 AM IST
கீழே விழுந்த ஃபோட்டோகிராபரை  கை தூக்கிவிட்ட ராகுல்… வைரலாகும் வீடியோ !!

சுருக்கம்

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னை புகைப்படம் எடுக்க வந்து தவறி விழுந்த புகைப்படக்காரருக்கு, கை கொடுத்து தூக்கிவிடும் புகைப்படமும்  வீடியோவும்  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒடிஷா மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுக் கூட்டங்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

முன்னதாக நேற்று  முன்தினம் புவனேஷ்வரிலுள்ள பிஜு பட்நாயக் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ராகுலுக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர் ஒருவர் எதிர்பாராத விதமாக அருகிலிருந்த படிக்கட்டுகளில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதனைக் கண்டு துரிதமாக கீழே இறங்கிய ராகுல் காந்தி, புகைப்படக்காரருக்கு கை கொடுத்து தூக்கிவிட்டு உதவினார். ராகுல் உதவினார். பின்னர் அவரிடம் ஏதேனும் அடிபட்டுவிட்டதா? என நலம் விசாரித்தார்.

இந்த நிகழ்வு அங்கிருந்த பொது மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!