
விமானத்தில் பயணம் செய்யும்போது பெட்டியை மேலே வைக்க சிரமப்பட்ட பெண் பயணி ஒருவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உதவி செய்தது அனைவரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவுகாத்திக்கு செல்வதற்காக டெல்லி விமானம் நிலையம் வந்தார். அங்கு பயணிகள் விமானத்தில் சென்று தனது இருக்கையில் அமர்ந்தார்.
அபோது சக பயணி ஒருவர் தனது உடமையை இருக்கைக்கு மேல் உள்ள இடத்தில் வைப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார். இதனைப் பார்த்த ராகுல் காந்தி உடனடியாக அந்த பெண்மணியிடம் பெட்டியை வாங்கி மேலே வைக்க உதவி செய்தார்.
இதற்காக அந்த பயணி ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந் செயலை விமானத்தில் இருந்த சக பயணிகள் பாராட்டினர். மேலும் அவர்கள் ராகுல் காந்தி தான் பயணம் செய்கிறார் என்று தெரிந்து கொண்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
ராகுல் காந்தி விமானத்தில் சக பயணிக்கு உதவிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.