ராகுல் காந்தியை கொல்ல சதியா ? விசாரணை நடத்த வேண்டும்….காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…

 
Published : Apr 27, 2018, 08:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
ராகுல் காந்தியை கொல்ல சதியா ? விசாரணை நடத்த வேண்டும்….காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…

சுருக்கம்

Ragul Gandhi flight met an accident hubli

காங்கிரஸ் கட்சி  தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில்  இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை  நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு நேற்று முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வட கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, ஹூப்ளி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ராகுல் காந்தி உள்பட அனைவரும் பத்திரமாக இறங்கினர்.  

 இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ராகுல் காந்தியை கொல்ல சதி நடந்ததாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!