இன்று பிற்பகல் 2.15 மணி….. ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…. வாய்ப்பா ? ஆப்பா ?

 
Published : Apr 27, 2018, 06:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
இன்று பிற்பகல் 2.15 மணி….. ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…. வாய்ப்பா ? ஆப்பா ?

சுருக்கம்

OPS and 11 mla case verdict in chennai high court

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில்  அவருக்கு  எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீா் செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய  வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்குகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த  பிப்ரவரி  மாதம் 18ம் தேதி முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம் உள்பட அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 11 போ் முதல்வா் மீது நம்பிக்கை இல்லை என்று வாக்களித்தனா். 



இதனைத் தொடா்ந்து அதிமுக கட்சியின் கொறடா உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீா் செல்வம் உள்பட நம்பிக்கை இல்லை என்று வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினா்களையும் கட்சி தாவல தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தார்.

மேலும் கோவை வடக்கு தொகுதியைச் சோ்ந்த அருண் குமார் கட்சி கொறடாவின் அனுமதியை பெறாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து விட்டார். இதனால் அவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சக்கரபாணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.



தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கில் சென்னை உயா்நீதி மன்றம் இன்று  பிற்பகல் 2.15 மணிக்கு தீா்ப்பு வழங்க உள்ளது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்படவார்களா? அல்லது தப்பி விடுவார்களா ? என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே  டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!