ச்சே! கொஞ்சம் டைம் கிடைச்சிருந்தாலும் சின்னம்மா சி.எம். ஆகியிருப்பார்: எக்கச்சக்க வருத்தத்தில் வருவாய்த்துறை அமைச்சர்.!!

By Selvanayagam PFirst Published Feb 17, 2019, 8:11 AM IST
Highlights

பேசிப்பேசி வளர்ந்தவைதான் திராவிட கட்சிகள்! தி.மு.க.வில் பேச்சாளர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் பேச்சு சுதந்திரம் முழுமையாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் இருந்தவரையில் அவர்களைத் தவிர அ.தி.மு.க.வில் யாருக்கும் பேச்சு சுதந்திரம் இல்லை. ‘நிர்வாகிகளை அடிமையாகவே வைத்திருக்கிறார் ஜெயலலிதா!’ என்று மிகக் கடுமையான சாடலுக்கு உள்ளானவர் ஜெ.,

ஆனால் அவரது  மறைவுக்குப் பின், கட்டுப்பாடின்றி பேச்சு சுதந்திரம் கிடைத்திருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் பேசும் பேச்சுகள் அந்த கட்சியின் மானத்தை எந்தளவுக்கு மஹோத்துவம் பெற வைத்துள்ளன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

ஒவ்வொரு மண்டலத்திலும் ஏதோ ஒரு நிர்வாகி கோக்குமாக்காக பேசி, அ.தி.மு.க.வை தெறிக்கவிடுவது வழக்கமாக இருந்தாலும் மதுரையில் மட்டும் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பேசியே கொள்ளுகிறார்கள். போதாதென்று அவர்களின் பக்கத்து மாவட்டத்துக்காரரான திண்டுக்கல் சீனிவாசனோ இவர்கள் இருவருக்குமே எக்கச்சக்க டஃப் கொடுக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஆர்.பி. உதயக்குமார் தெறிக்க விட்டிருக்கும் ஸ்டேட்மெண்டுகளை கவனியுங்கள்..
.
*    மதுரை எய்ம்ஸ் விழாவில் மேடையில் நாற்காலி கேட்டு நான் அடம்பிடித்ததாக ஒரு தகவல் ஓடுகிறது. அது சர்ச்சையான கருத்து. அதாவது பிரதமர் கலந்து கொண்ட மேடையில் நான் அமர்வதற்கு முதல்வர் அலுவலகத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அழைப்பிதழ் அதற்கு முன்னாடியே அச்சாகிவிட்டது. அதனால் எனக்கான அனுமதியை கொஞ்சம் பேசி வாங்கினேன். 

*    ஏங்க இந்த ஸ்டாலினுக்கு என்னதான் ஆச்சு? ஆளே ஒரு ’மாதிரி’ ஆயிட்டாரு. மாதிரி சட்டசபை நடத்துறார், மாதிரி கிராம சபை நடத்துறார். உண்மையிலேயே அவரு ஆளு ஒரு மாதிரிதான் ஆகிட்டார். 

*    எனக்கு இந்த போஸ்டர், புகழ் இதிலெல்லாம் விருப்பமில்லைங்க. ஆனா தொண்டர்களா பார்த்து விரும்பி செய்யுறப்ப என்ன பண்ண முடியும்? மதுரையில நான் கொண்டு வந்திருக்கிற திட்டங்களுக்காக எனக்கு பட்டங்கள் கொடுத்தால் அந்த லிஸ்ட்டு ரொம்பப்  பெருசா இருக்கும்.

*    கனிம வளம் மற்றும் மணல் போன்றவற்றில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க என்னுடைய வருவாய்த்துறை சார்பில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவிக்கலாமே தவிர, முறைகேடுகளை தடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. 

*    அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மாணத்தின்படி எல்லா எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டார்கள். சசிகலா முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். ஆனால் பதவியேற்பு நடத்தி வைக்க கவர்னர் வருவதற்குள் தீர்ப்பு வந்துவிட்டதால் தடை ஏற்பட்டுவிட்டது.

click me!