கருணாநிதி தமிழரில்லைதான்! அவங்க வீட்டுல என்ன மொழியில பேசுவாங்க தெரியுமா?: குஷ்பூ பற்ற வெச்ச நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் சீமான்.

By Vishnu PriyaFirst Published Feb 16, 2019, 8:23 PM IST
Highlights

’கருணாநிதி தமிழர் இல்லை’ என்று சமீபத்தில் கொளுத்திப் போட்டிருந்தார் குஷ்பூ. இது பெரியளவில் ஸ்டாலினை பாதித்தது. இந்த விவகாரத்தை கடும் கடுப்புடன் ராகுல் வரைக்கும் கொண்டு சென்றிருந்தார் தி.மு.க. தலைவர். 

கருணாநிதி  தமிழரில்லைதான்! அவங்க வீட்டுல என்ன மொழியில பேசுவாங்க தெரியுமா?: குஷ்பூ பற்ற வெச்ச நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் சீமான். 

’கருணாநிதி தமிழர் இல்லை’ என்று சமீபத்தில் கொளுத்திப் போட்டிருந்தார் குஷ்பூ. இது பெரியளவில் ஸ்டாலினை பாதித்தது. இந்த விவகாரத்தை கடும் கடுப்புடன் ராகுல் வரைக்கும் கொண்டு சென்றிருந்தார் தி.மு.க. தலைவர். 

இந்நிலையில் குஷ்பூவின் வழியில் சீமானும் கருணாநிதியை விமர்சித்து பேசி, இந்த வம்பை இன்னும் அதிகமாக வளர்த்திருக்கிறார் இப்படி...“கருணாநிதி தமிழர் இல்லைன்னு குஷ்பூ என்னாங்க சொல்றது, அதை கோபாலபுரமே சொல்லுமே. கருணாநிதியின் வீட்டிலேயே தெலுங்கில்தானே பேசிக்குவாங்க. 

இந்த விமர்சனத்தை கருணாநிதியே ஏத்துக்கிட்டிருக்கிறார். எப்படி தெரியுமா?...”கருணாநிதி தெலுங்கர்! அப்படின்னு சீமான் சொல்றாரே?’ன்னு ஒரு கேள்வி. அதற்கு கருணாநிதி சொன்ன பதில்...”தெலுங்கும் திராவிட மொழிகளில் ஒன்றுதானே!” என்பதுதான். ஆக அவரே ஒத்துக்கிட்ட மாதிரிதான் இது. இந்த உண்மையை இப்படி உரக்க சொல்லிவிட்டு, இப்போ ஏன் குஷ்பூ பல்டி அடிக்கிறார் அப்படிங்கிறதுதான் தெரியலை.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார். 

கருணாநிதியை சீமான் இப்படி வம்புக்கு இழுத்திருப்பதற்கு மிக மிக கடுமையான ரியாக்‌ஷனை காட்டியிருக்கிறார் ஸ்டாலின். சீமான் பேசியதற்கும் ராகுலின் கவனத்துக்கு தன் எரிச்சலைக் கொண்டு போயிருக்கும் ஸ்டாலின்...“உங்க கட்சி லேடி ஆரம்பிச்சு வெச்ச  தேவையற்ற, வாய்தடித்த விமர்சனம் எப்படி வளர்ந்துட்டு வருதுன்னு பாருங்க. இறந்த தலைவரின் பூர்வீகத்தையும், பழக்க வழக்கத்தையும் இப்போ பேசுறது கேவலமான அரசியல். இப்பவும் சொல்றோம்...எங்க தலைவரின் தன்மானத்தை அடகு வெச்சு கூட்டணி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.” என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறாராம். 

இதை தெளிவாக உள்வாங்கியிருக்கிறார் ராகுல். ஜம்மு பயங்கரவாத தாக்குதல் விவகாரம் ஓரளவு அடங்கிய பின் குஷ்பூ மீது அதிரடி நடவடிக்கை பாயலாம்! என்கிறார்கள். 

click me!