சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்…. 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவி வகித்தவர்…

By Selvanayagam PFirst Published Feb 16, 2019, 8:19 PM IST
Highlights

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பீலா ராஜேஷ் புதிய சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் முக்கியமாக 6 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் போக்குவரதுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத் துறை செயலராளர் ராதாகிருஷ்னனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக இட மாற்றம் செய்யப்படாமல் ஒரே பதவியில் இருந்து வந்துள்ளார்.

தமிழகத்தை சுனாமி தாக்கியபோது ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் மிக நன்றாக இருந்தது. பொது மக்களும் ஆட்சியாளர்களும் அவரைப் பாராட்டினர்.


இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே விஜய பாஸ்கரும் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வந்துள்ளார். தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்கியபோது அதை திறம்பட சமாளித்தார். இதே போல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள் சிறப்பாக செயல்படவும் ராதாகிருஷ்ணன் காரணமாக இருந்துள்ளார் என்ற நல்ல பெயரும் அவருக்கு கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து வருமானவரித்துறை ரெய்டு நடந்தபோதும் ஒரு சின்ன குற்றச்சாட்டு கூட ராதாகிருஷ்ணன் மீது எழுவில்லை என்பது குறிப்பிடத்க்கது. அத்தகைய சிறப்பு மிக்க ராதாகிருஷ்ணன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல் பத்திரப்பதிவுத்துறை ஐ.ஐ., குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை, மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.பீலா ராஜேஷ்  பிதிய சுகாதாரத்துறை செயலாளரக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

click me!