கருணாநிதிக்கு மஞ்சத்துண்டு! ஸ்டாலினுக்கு மஞ்சப்பை!! இந்தா ஆரம்பிச்சாச்சுல்ல அடுத்த பஞ்சாயத்து!

Published : Dec 29, 2021, 07:16 AM IST
கருணாநிதிக்கு மஞ்சத்துண்டு! ஸ்டாலினுக்கு மஞ்சப்பை!! இந்தா ஆரம்பிச்சாச்சுல்ல அடுத்த பஞ்சாயத்து!

சுருக்கம்

கருணாநிதி பயன்படுத்திய அதே மஞ்சள் சென்டிமெண்டை ஃபாலோ பண்ணும் வகையில்தான் ஸ்டாலின் மஞ்சப்பையை கையிலெடுத்துள்ளாரா..?

“என்னய்யா இது காட்டுமிராண்டித்தனம்?” - இந்து மத நேர்த்திக்கடனை நிறைவேற்றிய தன் அமைச்சரை நோக்கி கருணாநிதி உச்சரித்த வார்த்தை இது. பெரியாரின் சுயமரியாதைக் கட்சியிலிருந்து பிறந்தவர்கள் நாங்கள்! என்பதை தேவைப்படும் போதெல்லாம் வெளிப்படுத்திக் கொள்வதற்காக கருணாநிதி இப்படியான பகுத்தறிவு நிலைப்பாட்டை எடுத்து, பகீரென ஒரு சாடலை முன் வைப்பார்.

ஆனால் ‘கருணாநிதியின் கையிலிருப்பது பாரபட்ச பகுத்தறிவு. அவரால் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை இப்படி விமர்சிக்க முடியுமா?’ என்று பொளேர் விமர்சனத்தை வைப்பார்கள் எதிர்க்கட்சிகள். அவற்றை கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டே இருந்துததான்  அவரது அரசியல் சாணக்கியத்தனம்.

அப்பேர்ப்பட்ட கருணாநிதி, திடுதிப்புன்னு தன் கழுத்தில் பளீர் மஞ்சள் நிற சால்வையை அணிய துவங்கியபோது ‘கருணாநிதி ஜோஸியத்தை நாட துவங்கிவிட்டார். அது ராசி, நட்சத்திரம் பார்த்து அணிந்திருக்கும் வர்ணம்’ என்று தீ விமர்சனம் கிளம்பியது தமிழக அரசியல் அரங்கில். ஆனால் அதற்கு “எனது கழுத்து வலி இருக்குது. அதுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், கழுத்துப் பகுதிக்கு இதமான வெப்பம் தேவை! என்றும் அதற்கு இப்படி வெப்பம் அளிக்கும் தன்மை உடைய மஞ்சள் துண்டை அணிவது நல்லது! என்று கூறியதாலும், எனக்கு மஞ்சள் துண்டை அளித்த டாக்டர் ராமதாஸின் நட்புக்கு மரியாதை தரவுமே இதை அணிகிறேன்.’ என்று விளக்கம் அளித்தார். ஆனாலும் அதை ‘எஸ்கேபிஸம்’ என்று விடாமல் விமர்சித்தனர் எதிர்க்கட்சிகளும், தி.மு.க.வின் பகுத்தறிவு சித்தாந்தத்துக்கு  எதிரானவர்களும்.

கருணாநிதி தன் வாழ்வின் இறுதி வரையில் அப்படி மஞ்சள் துண்டை அணிந்தபடியேதான் பொதுவெளியிலும், கோபாலபுரம் இல்லத்தில் தன் அலுவல் அறையிலும் காணப்பட்டார்.

அவர் மறைந்து, அவர் மகன் ஸ்டாலின் இப்போது முரட்டு மெஜாரிட்டியுடன் முதல்வராகியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழித்துக் கட்டும் வகையில் ‘மீண்டும் மஞ்சப் பை’ எனும் திட்டத்தை துவக்கியுள்ளது தி.மு.க. அரசு.

விடுவார்களா விமர்சகர்கள்? கருணாநிதி பயன்படுத்திய அதே மஞ்சள் சென்டிமெண்டை ஃபாலோ பண்ணும் வகையில்தான் ஸ்டாலின் இதை கையிலெடுத்துள்ளார்! அவருக்கு ஆன்மிக நாட்டம் வெளிப்படையாக வந்துவிட்டது. அதனால்தான், அரசின் மிக முக்கிய நல திட்டங்களை இந்து மதத்தின் உகந்த நாட்களில், உகந்த இடங்களில் வைத்து ஆரம்பிக்கிறார்! என்று, சமீபத்தில் மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரியில் நின்று அவர் மிக முக்கிய மக்கள் நல திட்டத்தை துவக்கி வைத்ததை சுட்டிக் காட்டி செம்ம கெளப்பு கெளப்பிவிட்டனர்.

இதற்கு விளக்கம் கொடுத்திருக்கும் தி.மு.க.வின் மேல்நிலை நிர்வாகிகள் தரப்போ “இப்படியெல்லாம் கூட மோசமா சிந்திக்க முடியுமா? பிளாஸ்டிக் கவரால்தான் இந்த பூமியில பல மோசமான விளைவுகள் நடக்குது. மழை நீரை நிலத்தினுள் போக விடாமல் தடுக்குறதும் பிளாஸ்டிக்தான், தீனியில் கலந்து, பல்லாயிரம் விலங்குகளின் வயிற்றுக்குள் சென்று அவற்றை சாகடிப்பதும் பிளாஸ்டிக் தான். இந்த கொடுமைக்கெல்லாம் முடிவு கட்டும் நோக்கில் முதல்வர் கொண்டு வந்த பாரம்பரிய பயன்பாட்டு விஷயம்தான் இந்த மஞ்சப்பை. இதற்கு இப்படியெல்லாமா அரசியல் சாயம் பூசுவாங்க?’ என்று கேட்டிருக்கின்றனர்.

நம்புங்க பாஸு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!
ஓ.பி.எஸ் அப்செட்..! அமித் ஷா- விஜய்க்கு லாக்..! புதுக்கணக்கு போடும் இபிஎஸ்..!