பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும்? தேதியை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி!!

Published : Dec 28, 2021, 09:30 PM IST
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும்? தேதியை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி!!

சுருக்கம்

பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகியவை இடம்பெறுகின்றன. அதோடு ஒரு முழுநீள கரும்பும் வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தரமணியில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தர ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பானது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். மேலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு கைரேகை கட்டாயம் இல்லை, குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் நியாயவிலைக் கடையில் வந்து பெற்றுச் செல்லலாம். அதே நேரத்தில் வழக்கமான பொருட்களை பெறுவதற்கு கைரேகை கட்டாயம். இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நியாயவிலை கடைகளுக்குச் சென்றடைந்து விடும்.

ஜனவரி 3, 4 தேதிகள் முதல் பொருட்கள் வழங்கப்படும். முன்னதாக பரிசுப் பொருள் தொகுப்பினை பெறுவதற்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும். பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களின் பசியைப் போக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வரும் உணவகம் தொடங்க, அரசு இடம் வழங்கும். உணவகத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஒன்றிய அரசே 100% வழங்க வேண்டும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல, 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!
ஓ.பி.எஸ் அப்செட்..! அமித் ஷா- விஜய்க்கு லாக்..! புதுக்கணக்கு போடும் இபிஎஸ்..!