என்ன கேள்வி கேக்குறீங்க.. உங்களுக்கு கணக்குத் தெரியுமா சொல்லுங்க? செய்தியாளர்களிடம் எகிறிய முதல்வர் எடப்பாடி.!

By vinoth kumarFirst Published Nov 19, 2020, 11:10 AM IST
Highlights

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. ஆனால், நாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. ஆனால், நாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்றார்.

மேலும், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. ஆனால், நாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இந்த நீட்டை கொண்டுவந்தது காங்கிரசும், திமுகவும்தான். அப்பொழுதெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், எங்களிடம் மட்டும் 'நீட்டு', 'நீட்டு' எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்களும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் என்றார். 

அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், 7.5 இடஒதுக்கீடு கொண்டுவந்துள்ளதாக பெருமை பேசுகிறீர்கள் எனக் கூறி கேள்வி ஒன்றைத் தொடர, ''பெருமை பேசுகிறோம் எனத் தவறாகப் பேசக்கூடாது. என்ன இப்படித் தவறா கேக்குறீங்க? 7.5 சதவீதம்னா என்னனு உங்களுக்குத் தெரியுமா? நீட் தேர்வு வருவதற்கு முன்பு மருத்துவப் படிப்பில் எவ்வளவு பேர் சேர்ந்தார்கள் எனக் கணக்குத் தெரியுமா சொல்லுங்க? பெருமை பேசுகிறேன்னு சொல்லாதீங்க நான் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன். நான் கிராமத்திலிருந்து வந்தவன் ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்' எனக் காட்டமாக முதல்வர் பதிலளித்தார்.

click me!