தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதி கட்சி.. மக்களவை தேர்தல் கூட்டணியை அறிவித்த ஏ.சி சண்முகம்!

By Raghupati R  |  First Published Feb 25, 2024, 11:46 PM IST

தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என்று ஏ.சி சண்முகம் அறிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தேசிய அளவில் கூட்டணியைப் பலப்படுத்தி வரும் பாஜக, தமிழகத்தில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இல்லத்தி்ல் பா.ஜ.க. - த.மா.க. இடையே கூட்டணி குறித்துப் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Tap to resize

Latest Videos

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

இதனை தொடர்ந்து புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடனும் கூட்டணி குறித்து அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, இந்திய கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏ.சி. சண்முகம், “வாஜ்பாய் காலத்தில் இருந்து இன்று வரை 23 ஆண்டு காலமாக புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது. பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும். போட்டியிடக் கூடிய தொகுதிகளை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். 

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடி தான் பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். இந்தியா கூட்டணியிலும், அதிமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பிரதமர் மோடிக்கு இணையான தலைவர்கள் இன்றைய தினம் இந்தியாவில் யாரும் இல்லை” என்று கூறினார்.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

click me!