நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணியா அல்லது பாஜகவுடன் கூட்டணியா என்ற முக்கிய முடிவை நாளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையே தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முதல் கட்டத்தை முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்ததையை ஆரம்பித்துள்ளது. இதில் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இன்று மாலை பேச்சுவார்த்தையானது நடைபெற உள்ளது. அடுத்தடுத்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்பட்டு வருகிறது.அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக அதிமுக கூட்டணி தொடர்ந்து நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. எனவே இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்து வருகிறது. இதற்காக பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருவதால் தங்கள் டிமான்டை அதிகரித்துள்ளது இதனால் கூட்டணி இன்னமும் முடிவடையாமல் இழுபறிகளிலேயே உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பாஜகவை ஒன்றிணைக்கும் பணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ஈடுபட்டிருந்தார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தேசிய தலைமையை நேரில் சென்று சந்தித்து பேசி இருந்தார். ஆனால் மீண்டும் பாஜகவுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என அதிமுக சார்பில் உறுதியாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது கேள்விக்குறியே ஏற்படுத்தி இருந்தது. செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நடத்தியது.அதில் அதிமுகவா -பாஜக கூட்டணியா என கேள்வி எழுப்பப்பட்டு இருந்து இது பெரும்பாலானவர்கள் அதிமுக கூட்டணியே செல்ல வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது