சொன்னதை செய்து காட்டிய இபிஎஸ்.. அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது? எத்தனை தொகுதிகள் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 25, 2024, 1:40 PM IST

வட மாவட்டங்களில் செல்வாக்க மிக்க கட்சியாக பார்க்கப்படும் பாமக அதிமுக, பாஜக இருதரப்பிலும் பேசி வருவதாகவும் அதிக தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.


அதிமுக - பாமக கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதை அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் முன்வரவில்லை என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும் என்றார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ஒரே ஒரு தொகுதி தான்.. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி.! திமுகவின் நிபந்தனையால் அதிர்ச்சியில் வைகோ

இந்நிலையில், வட மாவட்டங்களில் செல்வாக்க மிக்க கட்சியாக பார்க்கப்படும் பாமக அதிமுக, பாஜக இருதரப்பிலும் பேசி வருவதாகவும் அதிக தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆகையால் பாமக தங்கள் பங்கம் இழுக்க அதிமுக, பாஜக போட்டா போட்டிக்கொண்டு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக - பாமக கட்சிக்கு  தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க:  ராமநாதபுரம் மக்களவை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு.. வேட்பாளர் யார் தெரியுமா? எந்த சின்னத்தில் போட்டி?

பாமகவை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும் என பாஜக தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் பாமக அதிமுக இடையே உடன்பாடு எட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அண்ணாமலையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக துணைத் தலைவர் கே.வி. ராமலிங்கம் பாமக இரண்டு தரப்பிலும் பேரம் பேசி வருவதாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!