ஜாதிசங்க பனியன் போடு, அரிவாள் எடுத்து வெட்டு, அடிதடி பண்ணு.. துண்டிவிடும் அன்புமணி.. Ex மாவட்ட செயலாளர் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2021, 3:18 PM IST
Highlights

தர்மபுரி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் ஏற்பாட்டில், சத்தியமூர்த்தி தலைமையில் பாமகவை சேர்ந்த 25 பேர் திமுகவில் இணைந்தனர். அதில் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன் - அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பீ. அன்பழகன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி. லட்சுமணன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு -அரூர் பேரூர்ச் செயலாளர் கி.அய்யப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

ஜாதி சார்ந்த பனியன் போட்டுக்கொண்டு அரிவாளை எடுத்து வெட்டு, அடிதடி பண்ணு என மாவட்ட செயலாளர்களை அன்புமணி ராமதாஸ் தூண்டி விடுகிறார் என்று அக்கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த தருமபுரி முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வந்தபோது வீட்டுக்குள் சென்ற அன்புமணி மகளின் திருமணத்திற்கு தான் வெளியே வந்தார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல், சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியதால் கூட்டணியில் நீடிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என முடிவு செய்த பாமக, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக விமர்சிக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: இனி வள்ளலார் பிறந்த தினம் இப்படித்தான் அழைக்கப்படும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்பு.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் அதிமுகவிலும், திமுகவிலும் மாறிமாறி இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.தர்மபுரி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் ஏற்பாட்டில், சத்தியமூர்த்தி தலைமையில் பாமகவை சேர்ந்த 25 பேர் திமுகவில் இணைந்தனர். அதில் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன்,

 

பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன் - அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பீ. அன்பழகன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி. லட்சுமணன் - பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு -அரூர் பேரூர்ச் செயலாளர் கி.அய்யப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரி முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, கூறியதாவது;- 2004இல் அன்புமணி எம்பி ஆவதற்கு முன்பு பாமகவின் நிலைமை வேறு ஆனால் தற்போது கட்சியில் காடுவெட்டி குரு போல யாரும் மேலே வந்து விடக்கூடாது என்பதில் அன்புமணி கவனமாக உள்ளார்.

இதையும் படியுங்கள்: அட ஆண்டவா.. தாய்மார்களே உஷார், தமிழகத்தில் 41 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு.. அமைச்சர் பகீர் தகவல்.

பாமகவில் நேர்மையாக இருப்பவர்களுக்கு வேலை இல்லை, 10.5 சதவீத இட ஒதுக்கீடு அவசரகதியில் அதிமுக ஆட்சியின் கடைசி தருவாயில் வாங்கப்பட்டது. ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றார். பாமகவில் உள்ள மாவட்ட செயலாளர்களை ஜாதி சார்ந்த பனியன் போட்டுக் கொள், அரிவாளை எடுத்து வெட்டு, அடிதடி பண்ணு என அன்புமணி ராமதாஸ் தூண்டி விடுகிறார், அவரின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தீர வேண்டும் என்றார். கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்றின்போது வீட்டின் உள்ளே சென்றவர், மகளின் திருமணத்திற்கு தான் வெளியே வந்தார் என்று அன்புமணியை அவர் கடுமையாக விமர்சித்தார்.

click me!