தோல்வி பயத்தால் அராஜகம் செய்து மிரட்டும் திமுக.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்.!

Published : Oct 05, 2021, 02:05 PM IST
தோல்வி பயத்தால் அராஜகம் செய்து மிரட்டும் திமுக.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்.!

சுருக்கம்

அரசு சுவரில் விளம்பரம் செய்திருப்பதாக அதிமுகவின் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவினரின் விளம்பரத்தை அழிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலரை திமுகவினர் மிரட்டுகின்றனர்.

திமுக புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படி கூறி மிரட்டுவதாக கரூர் எஸ்பி ப.சுந்தரவேலுவிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படியும், இல்லாவிட்டால் தேர்தல் பணியாற்றக் கூடாது என்றும் கூறி மிரட்டி வருகின்றனர். தோல்வி பயம் காரணமாக அராஜகம் செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.

கரூரில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான் முகக்கவசம் அணிந்து மரக்கன்றுகள் வழங்கியும், என் மீது போலீசார் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், வெள்ளியணையில் திமுக நடத்திய விழாவில் கூட்டம் கூடியதற்கு வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

அரசு சுவரில் விளம்பரம் செய்திருப்பதாக அதிமுகவின் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவினரின் விளம்பரத்தை அழிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலரை திமுகவினர் மிரட்டுகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுகவிற்கு எதிராக கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரி்க்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப்பா..? பள்ளி மாணவர்களுக்கு திமுக அரசு பாரபட்சம்..!
இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!