அட ஆண்டவா.. தாய்மார்களே உஷார், தமிழகத்தில் 41 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு.. அமைச்சர் பகீர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2021, 1:31 PM IST
Highlights

இதை கட்டுப்படுத்த  அனைத்து துறைகளுக்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்து இருக்கிறோம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர்க்கு உடல் வெப்பநிலை சோதனை மூலம் காய்ச்சல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் இதுவரை டெங்குவால் 41 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 5ஆம் கட்ட தடுப்பூசி முகாம் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் அன்று சுமார் முப்பதாயிரம் முகாம்கள் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி முகாம்கள் வேகவேகமாக நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்: பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போர் தேவை.. கர்ஜிக்கும் சீமான்.

3வது அலை இந்த ஆண்டின் இறுதியில் தாக்கக்கூடும் என ஐசிஎம்ஆர் எச்சரித்து வரும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் மழைக்காலம் தொடங்கி உள்ளதால், டெங்கு பாதிப்பு தற்போது தலைதூக்க தொடங்கியுள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறை பணியாளர்கள்  முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு  பிரிவை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு தாக்கம் தலைதூக்க தொடங்கியுள்ளது என்றார்.

இதை கட்டுப்படுத்த  அனைத்து துறைகளுக்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்து இருக்கிறோம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர்க்கு உடல் வெப்பநிலை சோதனை மூலம் காய்ச்சல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பால் 41 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார், அதேபோல தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம், குழந்தைகளுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம் என்றும் கூறினார். 

இதையும் படியுங்கள்:  அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் அடித்து ஊற்றப்போகுதாம். குறிப்பா இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருங்க.

கொரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. 75% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனாவால்  ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 33 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது 15 இலட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்றார். விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறினார். 
 

click me!