இதை திரும்ப பெற்றாலே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்.. ஒன்றிய அரசுக்கு எதிராக ஓங்கி அடிக்கும் ஸ்டாலின்.!

Published : Oct 05, 2021, 01:17 PM ISTUpdated : Oct 05, 2021, 01:19 PM IST
இதை திரும்ப பெற்றாலே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்.. ஒன்றிய அரசுக்கு எதிராக ஓங்கி அடிக்கும் ஸ்டாலின்.!

சுருக்கம்

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.

இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க;- அப்பவே ராஜாவை தூக்கி உள்ள வச்சியிருந்தா திரும்பவும் இப்படி பேசியிருப்பாரா.. கொதிக்கும் வேல்முருகன்..!

இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப்பா..? பள்ளி மாணவர்களுக்கு திமுக அரசு பாரபட்சம்..!
இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!