" பிரதமரை கொல்ல பஞ்சாப் முதல்வர் சதி "..? " ஆதாரம் இருக்கு".. அலறவிட்ட அஸ்ஸாம் முதல்வர்.

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2022, 3:26 PM IST
Highlights

பஞ்சாபில் நிலைமை என்ன என்பதை உள்துறை அமைச்சர் அல்லது குடியரசுத் தலைவருக்கு அவர் தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் பிரியங்கா காந்தி மற்றும் சில காங்கிரஸ் அலுவலக அதிகாரிகளுக்கு அவர் அதை விளக்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சி பிரச்சினை அல்ல, இது நாட்டின் பிரச்சனை, மொத்தத்தில் தற்போது வெளிவந்துள்ள ஸ்டிங் ஆபரேஷன் மற்றும் ஆதாரங்கள் மூலம் பிரதமர் மோடியை கொல்ல காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் சதி செய்திருப்பது தெளிவாகி உள்ளது. 

கடந்த ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் வந்திருந்த பாரத பிரதமர் மோடியை பஞ்சாப் மாநில முதல்வர் மற்றும் காங்கிரஸ் உயர் தலைவர்கள் கொல்ல சதி செய்துள்ளனர் என அசாம் மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா  குற்றம் சாட்டி உள்ளார். இச் சதியில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சென்றார். அப்போது அவர் சென்ற பாதையில் விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணம் கருதி பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருந்தது. ஆனால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பிரதமர் திரும்பினார். தற்போது பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த குளறுபடியை விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக காங்கிரஸ் மாறிமாறி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் மாநிர முதலமைச்சர்  ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரதமரை கொலை செய்ய சதி நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.  

மேலும் அவர் கூறியிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சர்வதேச அளவில் ஒரு சதி நடந்திருக்கிறது. அது நன்கு திட்டமிட்ட ஒரு சதி, அதன் முழு விவரமும் பஞ்சாப் காவல்துறைக்கு தெரியும். எனவே இந்த சதிக்கு காரணமாக இருந்த பஞ்சாப் முதல்வரை கைது செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன், பிரதமர் பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பாக இந்தியா டுடே தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் சிறந்த உதாரணம், அதில்  ஜனவரி 2 தேதி பிரதமரை கொல்ல சதி நடக்கிறது என காவல்துறைக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருக்கிறது. அந்த 2 ஆம் தேதியே பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் மாவட்ட எஸ்பியிடம் அது தொடர்பாக  விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். ஜனவரி 5 அன்று என்ன நடக்கும் என்பது குறித்து அதில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்த வெளியிட்ட கருத்துக்களை வைத்து பார்க்கும்போது சதி திட்டம் குறித்து அவர்களுக்கு முன்பே தெரியும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

பிரதமர் செல்லும் பாதையில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று பல அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஸ்டிங் ஆபரேஷன் மூலம் முழு சதியம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, ஜனவரி 2ஆம் தேதி பஞ்சாப் காவல்துறைக்கு இதுபற்றி தெரிந்திருக்கிறது என்றால் பஞ்சாப் மாநில முதல்வருக்கும் இது தெரியும். பிரதமர் சாலையில் 15-20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நேரத்தில் அந்தப் பகுதி இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பதால், ட்ரோன் மூலமோ அல்லது ஸ்னைப்பர் தொலைதூர துப்பாக்கி சூடு மூலமோ,ஏவுகணை வீச்சு  மூலமோ பிரதமரை தாக்க வாய்ப்பு இருந்திருக்கிறது என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார். மேலும் covid-19 பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு இருந்ததால் பிரதமரை வரவேற்க செல்லவில்லை என்று பஞ்சாப் முதல்வர் கூறுகிறார். ஆனால் அவர் முகக் கவசம் அணியாமல் மறுநாள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

பஞ்சாபில் நிலைமை என்ன என்பதை உள்துறை அமைச்சர் அல்லது குடியரசுத் தலைவருக்கு அவர் தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் பிரியங்கா காந்தி மற்றும் சில காங்கிரஸ் அலுவலக அதிகாரிகளுக்கு அவர் அதை விளக்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சி பிரச்சினை அல்ல, இது நாட்டின் பிரச்சனை, மொத்தத்தில் தற்போது வெளிவந்துள்ள ஸ்டிங் ஆபரேஷன் மற்றும் ஆதாரங்கள் மூலம் பிரதமர் மோடியை கொல்ல காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் சதி செய்திருப்பது தெளிவாகி உள்ளது. எனவே பஞ்சாப் மாநில முதல்வரை கைது செய்ய வேண்டும். அரசியல் சதியை தாண்டி பஞ்சாப் முதல்வர் ஒரு சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளார், தீவிரவாத குழுக்களுடன் இணைந்து பிரதமரை கொல்ல சதி செய்துள்ளார் என்று நான் சந்தேகிக்கிறேன். இதுதொடர்பாக உயர்மட்ட, நடுநிலையான ஒரு விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

 
 

click me!