கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செயல்படுகிறதா? இல்லையா?.. எளிமையாக அறிவது எப்படி.? ரொம்ப சிம்பிள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2022, 2:23 PM IST
Highlights

இந்த சோதனையானது ஒருவர் உடலில் எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி ஆன்டிபாடிகள் உள்ளது என்றும், அதன் அளவை எவ்வளவு என்பதை மட்டுமே கண்டறிய முடியும். இது நோய்த் தொற்றில் இருந்து மீண்ட பிறகு அல்லது தடுப்பூசி போட்ட பிறகு செய்யப்படுகிற ஒரு சோதனை ஆகும். 

கொரோனா தடுப்பூசியின்  2 டோஸ்களும் உடலில் செயல்படுகிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிவது.? நாடு முழுவதும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 18 வயதுக்கு மேற்ப்பட்ட 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பபூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் இரண்டு டோஸை கடந்து மூன்றாவது டோஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் மனதில் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டால் போதுமா? அல்லது மூன்றாவது டோஸ் தேவையா? இதுவரை செலுத்திக் கொண்ட  டோஸ்கள் உடலில் எப்படி செயல்படுகிறது என்ற சந்தேகம் இருந்து வருகிறது. அதை எளிமையாக கண்டுபிடிக்க வழிஉள்ளதா? அதற்கு நிறைய பணம் தேவைப்படுமா என்ற  சந்தேகம் ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது.

உண்மையில் இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே ஒரு சோதனை செய்தால் போதும் பதில் கிடைத்து விடும்.  அந்த சோதனையின் பெயர்தான் ' ஆன்டிபாடி டெஸ்ட் ' என அழைக்கப்படும் நோயெதிர்ப்பு சக்கி சோதனை.  ஆன்டிபாடி டெஸ்ட் எப்படி எங்கு செய்யலாம், அதன் மூலம் என்னென்ன விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்? எவ்வளவு நேரத்தில் அதற்கான அறிக்கை கிடைக்கும் என்ற தகவல்கள் பின்வருமாறு:-

ஆன்டிபாடிகள் என்றால் என்ன...? ஒரு வைரஸ் நமது உடலில் நுழைந்தால் அதை எதிர்த்து போராட இயற்கையாகவே சில புரதங்கள் உடலில் உருவாக்கப்படுகின்றன அவை வைரஸை போலவே நமது உடலிலும் உள்ளன, இத்தகைய புரதங்கள் தான் ஆன்டிபாடிகள் என்று அழைக்கப்படுகிறது.

தடுப்பூசி வேலை செய்கிறதா இல்லையா என்பதை ஆன்டிபாடி சோதனை வெளிப்படுத்துகிறதா..? என்றால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆன்டிபாடி சோதனை செய்வதன் மூலம் நாம் பெற்ற தடுப்பூசி போதுமானதா அல்ல மீண்டும் தடுப்பூசி போட வேண்டுமா என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒருவர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டால், சோதனைக்கு பிறகு உடலில் ஆன்டிபாடிகள் குறைவாக இருந்தால், தடுப்பூசியின் தாக்கம் நமது உடலில் குறைந்துள்ளது என்று அர்த்தமாகும். அதேநேரத்தில் உடலில் அதிக ஆன்டிபாடிகள் இருந்தால் பூஸ்டர் தடுப்பூசிகள் தேவையில்லை என்று அர்த்தம்.

தடுப்பூசிகள் போடுவதன் மூலம் ஆன்டிபாடிகள் உருவாக்கப் படுகின்றனவா..? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், தடுப்பூசி மட்டும் ஆன்டிபாடிகளை உருவாக்காது, நாம் கொரோனாவில் இருந்து மீண்டதற்குப் பிறகு ஆன்டிபாடிகள் பரிசோதனை செய்தாலும், நமது உடலில் ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பதை நாம் அறியமுடியும். அது பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும், ஒருவர் விரும்பினால் இதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

ஆன்டிபாடி பரிசோதனை செய்ய எவ்வளவு செலவாகும்..?
ஆன்டிபாடி சோதனையை செய்ய சுமார் 500 முதல் 1000 வரை செலவாகும். டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மன்ட் ஆர்கனிஷயேசன் (டிஆர்டிஓ) சமீபத்தில் டிப்கோ ஒன் கருவியை ஆன்டிபாடி சோதனைக்காக தயாரித்தது. இதன் விலை ரூபாய் 75 மட்டுமே, ஒருவர் ஆன்டிபாடி சோதனை செய்த பிறகு அதற்கான ரிசல்டைபெற அதிக நேரம் தேவைப்படாது, ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் அதை நாம்  அறிந்து கொள்ள முடியும்.

அதேநேரத்தில் ஆன்டிபாடி சோதனை மூலம் உடலில் நோய் தொற்று இருப்பதை கண்டறிய முடியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை ஆன்டிபாடி சோதனையால் தீர்மானிக்க முடியாது. இந்த சோதனையானது ஒருவர் உடலில் எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி ஆன்டிபாடிகள் உள்ளது என்றும், அதன் அளவை எவ்வளவு என்பதை மட்டுமே கண்டறிய முடியும். இது நோய்த் தொற்றில் இருந்து மீண்ட பிறகு அல்லது தடுப்பூசி போட்ட பிறகு செய்யப்படுகிற ஒரு சோதனை ஆகும். ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு, சுமார் இரண்டு வாரங்கள் கழித்து இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏனெனில் 13, 14 நாட்களுக்குப் பிறகுதான் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!