பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம் - ராமதாஸ் கருத்து

By Velmurugan s  |  First Published Dec 21, 2023, 4:06 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


சொத்து குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தில், “வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த  வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது.  உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு பொதுவாழ்க்கையில்  இருப்பவர்களுக்கு  ஒரு பாடம்.

Tap to resize

Latest Videos

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் - அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற  சென்னை உயர்நீதிமன்றத்தின்  இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

click me!