பொன்முடிக்கு 30 நாட்கள் அவகாசம்... சரணடையாவிட்டால் நடவடிக்கை எடுங்கள்- விழுப்புரம் கோர்ட்டிற்கு பறந்த உத்தரவு

By Ajmal Khan  |  First Published Dec 21, 2023, 2:58 PM IST

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 30 நாட்களுக்குள் சரணடையாவிட்டால் நடவடிக்கை எடுத்த விழுப்புரம் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொன்முடி வழக்கின் பின்னனி

கடந்த திமுக ஆட்சி காலமான 2006- 2011 ஆம் ஆண்டு காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடாக சொத்துக்கள் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட வழக்கில் வேலூர் கீழமை நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லையென விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

Tap to resize

Latest Videos

தண்டனை விதித்த உயர்நீதிமன்றம்

இதனையடுத்து இன்று தண்டனை விவரங்களை நீதிபதி வெளியிட்டார். அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

சரணடையாவிட்டால் நடவடிக்கை எடுங்கள்

மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் ஜனவரி 22ஆம் தேதிக்குள் சரணடையாவிட்டால் நடவடிக்கை எடுக்க விழுப்புரம் நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

இதையும் படியுங்கள்

Ponmudi Case : எம்எல்ஏ பதவியை இழந்த பொன்முடி.? திருக்கோவிலூரில் எப்போது இடைத்தேர்தல்.? திமுக வேட்பாளர் யார்.?

click me!