மத்திய சிறையில் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என தனி கட்டிடம் தேவைப்படும் போல- கிண்டல் செய்யும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Dec 21, 2023, 1:03 PM IST

திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


திமுக அமைச்சர்கள் தொடர் கைது

அதிமுக ஆட்சி காலத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 150 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு இன்னும் ஜாமின் கிடைக்காத நிலை உள்ளது. இருந்த போதும் அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 

Latest Videos

undefined

விஞ்ஞானப்பூர்வ மோசடி

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.  இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில்,

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு…

— K.Annamalai (@annamalai_k)

 

சிறையில் தனி கட்டிடம்

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.  திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். 

இதையும் படியுங்கள்

Breaking News : ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

click me!