சைகையால் பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு.. காது கேட்கும் கருவியை அனுப்பிய பாஜக - ஆ.ராசா தான் காரணம்.!

Published : Sep 19, 2022, 09:22 PM IST
சைகையால் பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு.. காது கேட்கும் கருவியை அனுப்பிய பாஜக - ஆ.ராசா தான் காரணம்.!

சுருக்கம்

திராவிட கழக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த விழாவில் பேசிய அவர் நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நீ இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், நீ பாரசீகனாக இல்லாமல் இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இது போன்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அவை இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் ஆகத்தான் இருப்பாய்.

சூத்திரன் என்றால் விபச்சாரியன் மகன் இந்துவாக இருக்கும் வரை உன்னைப் பஞ்சவன் என்றும். நீ இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவனாக தான் இருப்பாய் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாத ஆட்களாக இருக்க விரும்புகிறீர்கள்' என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

ஆ.ராசா பேசிய இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. திமுக எம்.பி ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல்நிலையித்தில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர்  புகார் மனு கொடுத்து வருகின்றர். 

அதிமுகவினரோ ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் சேகர்பாபு. அப்போது அவரிடம் எம்.பி ஆ.ராசாவின் சர்ச்சை கருத்தை பற்றி கேள்வி கேட்க, எனக்கு காது கேட்கவில்லை என்று சைகை காட்டிய படியே பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இருந்து நழுவி சென்றார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. 

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

அமைச்சர் சேகர்பாபுவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பாஜகவினர் அமைச்சர் சேகர்பாபுவுக்கு, புதுக்கோட்டை பாஜக சார்பில் 7,000 ரூபாய் மதிப்பிலான புதிய காது கேட்கும் கருவியை அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!