‘ரேசன் கடை இல்ல... வேலை இல்ல’... நாராயணசாமி அரசை நாறு நாராய் கிழித்த மக்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 16, 2021, 08:27 PM IST
‘ரேசன் கடை இல்ல... வேலை இல்ல’... நாராயணசாமி அரசை நாறு நாராய் கிழித்த மக்கள்...!

சுருக்கம்

5 ஆண்டுகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பரவாயில்லை என 34 சதவீத பேரும், மோசம் என 29 சதவீத பேரும் பதிலளித்துள்ளனர். 

புதுச்சேரியில் மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் நாராயணசாமி கடைபிடித்து வந்த மோதல் போக்கால் மக்கள் அனுபவித்த இம்சைகள் கொஞ்ச நஞ்சமில்லை. முறையான சாலை வசதி, ரேசன் கடைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைதல் என ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மையை இழந்து, பதவியை ராஜினாமா செய்தது. 

மீண்டும் எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர்ந்தே ஆக வேண்டுமென திமுகவும், காங்கிரஸும் தினுசு, தினுசாக காய் நகர்த்தி வரும் இதே நேரத்தில் புதுச்சேரி மக்களின் மனக்குமுறல்களை பதிவு செய்துள்ளது லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு ஒன்று.  ஏசியா நெட் செய்தி நிறுவனம், சி ஃ போர் நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள சர்வேயின் படி,  பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் 52 சதவீத வாக்குகளை அள்ளிக் குவிக்கப் போவது உறுதியாகியுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதி மக்களிடமும் ரேண்டம் சம்பிளிங் முறையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயின் படி, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 36 சதவீத வாக்குகளும், தனித்து களம் காண்பதாக தேர்தலில் இறங்கியுள்ள இதர கட்சிகளுக்கு 12 சதவீத வாக்குகளும் மட்டுமே கிடைக்கும் என திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சில கேள்விகளுக்கு புதுச்சேரி மக்கள் கொடுத்துள்ள பதில்களின் சதவீதம் நாராயணசாமி நடத்திய ஆட்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. 

முதலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதுச்சேரியை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 39 சதவீத மக்கள் பதிலளித்துள்ளன. 5 ஆண்டுகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பரவாயில்லை என 34 சதவீத பேரும், மோசம் என 29 சதவீத பேரும் பதிலளித்துள்ளனர். உங்களுடைய தொகுதிகள் நீங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் என்ன என்ற கேள்வி ரேஷன் கடைகள் இல்லை  - 22%, திறந்திருக்கும் சாக்கடைகள் - 20%, மோசமான சாலைகள் - 17%, வேலையில்லா திண்ட்டாம் -17% என்றும் எதையெல்லாம் சிறப்பாக நாராயணசாமி செயல்படுத்தியாக கூறினாரோ அதையெல்லாம் நாறு நாராய் கிழித்து மக்கள் பட்டியலிட்டுள்ளனர்.  இதேபோல் ஏகப்பட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி மக்கள் நாராயணசாமி மரண அடி கொடுத்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!