பாஜக வெற்றியை எங்களால் கண்கூடாக காண முடிகிறது... நாராயணசாமியை நாறடித்த நமச்சிவாயம்..!

By vinoth kumarFirst Published Mar 16, 2021, 8:03 PM IST
Highlights

புதுச்சேரி கருத்து கணிப்பு முடிவுகள் வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான முடிவு என பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் கூறியுள்ளார். 

புதுச்சேரி கருத்து கணிப்பு முடிவுகள் வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான முடிவு என பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் கூறியுள்ளார். 

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்ட நிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை இந்த கருத்து கணிப்பு உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக நமச்சிவாயம் கூறுகையில்;- புதுச்சேரி கருத்து கணிப்பு முடிவுகள் வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான முடிவு. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மக்கள் இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளனர். எங்களின் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருக்கிறது என்பது எங்களால் கண்கூடாக காண முடிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி வரவேண்டும் என்பது தான் மக்களின் எண்ணமாக உள்ளது. அந்த அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். 

நாங்கள் மெகா கூட்டணியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால், மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு நான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்ற காரணத்தினால் தான் பதவியை ராஜினாமாசெய்தேன். ஆனால், மக்கள் இந்த முடிவை மனப்பூர்வாக ஏற்றுக்கொண்டதால் தான் 53 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். துணை நிலை ஆளுநர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் நேரடியாக சந்தித்து பேசி இருக்கலாம். ஆளுங்கட்சியின் முதல்வர் போல் இல்லாமல் ஒரு எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்பட்டதால் தான் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளது என  நமச்சிவாயம் கூறியுள்ளார்.

click me!