‘மத்திய அரசுடனான மோதல் போக்கிற்கு மக்கள் கொடுத்த பதிலடி’... நாராயணசாமியை பங்கம் செய்த அதிமுக அன்பழகன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 16, 2021, 7:44 PM IST
Highlights

புதுச்சேரியில் உள்ள ஆண், பெண் என அனைவரும் நாரயணசாமி அரசு மீது வெறுப்பைக் உமிழ காரணம் என்னவென புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் சி ஃ போர் நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள சர்வேயின் படி, என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 23 முதல் 27 தொகுதிகள் வரை வெற்றி கிட்டும் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில், அதிமுக என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி 52 சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை பெரும் எனவும், திமுக காங்கிரஸ் கூட்டணி 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்திக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. 

அதேபோல் புதுவையில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் ஆதரவு யாருக்கு என்பதும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி 53 சதவீத பெண்களின் வாக்கு அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கே எனவும், வெறும் 37 சதவீதம் பெண்களே காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும் தெரியவந்துள்ளது. அதேபோல் 35 சதவீத ஆண்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும், அதே 51 சதவீத ஆண்களின் வாக்கு அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கே விழும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஆண், பெண் என அனைவரும் நாரயணசாமி அரசு மீது வெறுப்பைக் உமிழ காரணம் என்னவென புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில்,“புதுச்சேரியில் மோசமான ஆட்சியை காங்கிரஸ், திமுக கூட்டணி கொடுத்து வந்தது. புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மத்திய அரசுடனும், துணை நிலை ஆளுநருடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். நாராயணசாமியின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு தொடர்பான மோதல்களால் புதுச்சேரி அரசின் வளர்ச்சி முற்றிலும் தடை பட்டது” என தெரிவித்தார். 
 

click me!