இளைஞர்கள் மட்டுமல்ல பெண்களின் வாக்கும் பாஜக கூட்டணிக்குதான். காங்கிரசை கதற வைக்கும் சர்வே.

Published : Mar 16, 2021, 07:20 PM IST
இளைஞர்கள் மட்டுமல்ல பெண்களின் வாக்கும் பாஜக கூட்டணிக்குதான். காங்கிரசை கதற வைக்கும் சர்வே.

சுருக்கம்

அதேபோல் அம்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 56% பேர் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் என தெரியவந்துள்ளது.  

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில்  புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 56% பேர் வாக்களிப்பர் எனவும், 53 சதவீதம் பெண்களின்  வாக்குகளும் அதிமுக பாஜக என்ஆர்காங் கூட்டணிக்கே எனவும் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் சிஃ போர் இணைந்து நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. 

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதுவையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு என்.ஆர் காங்கிரஸ், அதிமுக, உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை வெற்றிகரமாக அமைத்துள்ளனர். புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான பணிகளில் அவர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், 

புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏசியானெட்நியூஸ் நெட்வொர்க் -சி ஃபோர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதில்  என். ஆர் காங்கிரஸ் அதிமுக, பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

குறிப்பாக- பாஜக- அதிமுக- என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகள் முதல் 27 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடும் எனவும், மொத்தத்தில் 52 சதவீத வாக்குகளை இக்கூட்டணி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. எதிரணியில் உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி வெறும் 3 முதல் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது  எனவும், வெறும் 36% வாக்குகளை மட்டுமே பெற வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரியவந்துள்ளது. 

புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் நடத்தப்பட்டுள்ள இக்கருத்து கணிப்பில், அங்கு பரவி விரவி உள்ள  ஒவ்வொரு சமூகத்தினரையும் தனித்தனியாக கணக்கிட்டு அவர்களின் வாக்கு எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு என்பன உள்ளிட்ட ஆய்வுகள் துள்ளியமாக நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் ஆதரவு யாருக்கு என்பதும் கணிக்கப்பட்டுள்ளது. அதில், அம்மாநிலத்தில் 53 சதவீத பெண்களின் வாக்கு அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கே எனவும், வெறும் 37 சதவீதம் பெண்களே காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும் தெரியவந்துள்ளது. அதேபோல் 35 சதவீத ஆண்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும், அதே 51 சதவீத ஆண்களின் வாக்கு அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கே விழும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

அதேபோல் அம்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 56% பேர் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் என தெரியவந்துள்ளது. அவர்கள் 37 சதவீதம் பேர் மட்டுமே திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 26 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களில் 38% பேர் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும், அது அவர்களில் 48% பேர் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும் தெரியவந்துள்ளது. அதேபோல் 36 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட 33 சதவீதம் பேர் திமுக- காங்கிரஸ்  கூட்டணிக்கு வாக்களிப்பர் என்றும், அதே அவர்களில் 51 சதவீதம் பேர் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும் தெரியவந்துள்ளது. 

அதேபோல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 34% பேர்  திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும், அதே அவர்களில் 53% பேர் அதிமுக-பாஜக- என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் எனவும் தெரியவந்துள்ளது. ஆக மொத்தத்தில் இளையோர் முதல் முதியோர் வரை பெரும்பாலானோர் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் என தெள்ளத் தெளிவாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் புதுச்சேரியில் அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி உறுதி  என்பது  மலைமேல் மாணிக்கமாகியுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவைச் சுற்றி வளைக்கத் தயாராகும் சீனா..! நான்கு நாடுகளில் ஸ்கெட்ச்.. அம்பலப்படுத்திய அமெரிக்கா..!
காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம்.. ஜாதி, ஊழல் கட்சிகளும் வேண்டாம்... விஜய் எடுக்கும் புது ரூட்..!